பொதுப் பார்வை
கீழ்கண்ட காண்டங்களின் பலன்களைச் சுருக்கமாகக் கூறுவது; மற்ற காண்டங்களைப் பார்க்க அவசியமானது.



இது எங்கள் பாரம்பரியக் குலத்தொழில்; ஐந்தாவது தலைமுறையாகத் தொடர்ந்து நாடி ஜோதிடச் சேவை செய்து வருகிறோம். மகரிஷிகளும் சித்தர்களும் எழுதி வைத்த பழங்கால ஓலைச்சுவடிகளின் வழியாக, மக்களின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்க்கைப் பயணத்திற்கு 26 ஆண்டுகால அனுபவத்துடன் வழிகாட்டுகிறோம். ஆண்களின் வலது கைப் பெருவிரல் ரேகையையும் பெண்களின் இடது கைப் பெருவிரல் ரேகையையும் அடிப்படையாகக் கொண்டு தொடர்புடைய ஓலைச்சுவடிகளைத் தேடி, அவற்றில் எழுதப்பட்டுள்ள பலன்களைத் துல்லியமாக வாசித்து விளக்குகிறோம்.
கல்வி, தொழில், திருமணம், குழந்தைப்பேறு, குடும்பம், உடல்நலம், ஆயுள், எதிரி மற்றும் கடன், வழக்கு, வீடு மற்றும் சொத்து, வெளிநாட்டுப் பயணம், ஆன்மிகத் தேடல்—இவை உங்கள் வாழ்க்கையில் எழும் முக்கியமான கேள்விகள். பாரம்பரிய நாடி வாசிப்பின் வழியாக அவற்றைப் பற்றி தெளிவாகப் பேசிப் புரிந்துகொள்ளுங்கள்.
தமிழகத்தின் ஆன்மீக மரபுநாடி மரபின்படி, வசிஷ்டர், அகத்தியர் போன்ற சப்தரிஷிகளும் பதினெட்டு சித்தர்களும் மனிதர்களின் வாழ்க்கையைப் பனை ஓலைகளில் பதிவு செய்துள்ளனர். வைத்தீஸ்வரன் கோவிலில் வாழ்ந்த எங்கள் குல முன்னோர்கள் அவற்றைப் பாதுகாத்து, மக்களுக்குச் சேவை செய்து வந்துள்ளனர்.
நேரம் கேட்டு முன்பதிவு செய்யுங்கள்↗வாழ்க்கையில் முயற்சி செய்யக்கூடிய பலதரப்பட்ட காரியங்களின் வளர்ச்சிக்கும் தடுமாற்றங்களுக்கும் தடைகளுக்கும் குழப்பங்களுக்கு நல்ல தீர்வும், முறையான வழிகாட்டுதலும், அதற்குரிய பரிகாரங்களும் ஓலைச்சுவடிகளின் அடிப்படையில் வாசித்து விளக்கம் அளிக்கப்படும்.

கீழ்கண்ட காண்டங்களின் பலன்களைச் சுருக்கமாகக் கூறுவது; மற்ற காண்டங்களைப் பார்க்க அவசியமானது.
கல்வி, தனம், குடும்பம், கண்பார்வை, வாக்கு முதலியவற்றைக் கூறுவது.
சகோதரன், சகோதரி, தைரியம், முயற்சி, வெற்றி போன்ற பலன்களைக் கூறுவது.
தாய், மனைவி, கட்டிடம், வாகனம், சுகம், நீர்ப்பாசனம், அதிர்ஷ்டக் கற்கள், எண்கள் பற்றிக் கூறுவது.
குழந்தைகள், முன்னோர் சொத்து, குழந்தைகளின் முன்னேற்றம், குழந்தைகளால் அடையும் நன்மைகள், குழந்தை இல்லாததற்கான காரணம், குழந்தைப் பாக்கியம் அடையும் வழிமுறைகள் பற்றிக் கூறுவது.
வாழ்க்கையில் ஏற்படும் கடன், பகை, நோய்கள், கண்டம், எதிரி, வழக்கு, தண்டனை பற்றிக் கூறுவது.
திருமண காலம், திருமணத் திசை, திருமணத்தைப் பற்றிய சில அடையாளக் குறிப்புகள் கூறுவது.
ஆயுள், உடல்நலம், நீண்டநோய், கண்டம், விபத்து முதலியவற்றைக் கூறுவது.
தகப்பனார், செல்வம், இறை வழிபாடு, பொதுத் தொண்டுகள் பற்றிக் கூறுவது.
வாழ்க்கையில் எந்தவிதமான உத்தியோகம், தொழில், வியாபாரம் செய்தால் லாபம் கிடைக்கும், வாழ்வில் உயர்நிலை அடைதல், அரசியல் தொடர்புகள் பற்றிக் கூறுவது.
இரண்டாவது திருமணத்தைப் பற்றிய விளக்கம், அதனால் ஏற்படும் நன்மைகள், எண்ணங்கள் நிறைவேறுதல் பற்றிக் கூறுவது.
வெளிநாடு செல்வதைப் பற்றியும், அதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் செலவுகளைப் பற்றியும் கூறுவது.
பொதுக் காண்டங்களிலிருந்து தனியாகப் பார்க்கப்படும் சிறப்பு வாசிப்பு அத்தியாயங்கள்.

முன் பிறவியில் பிறந்த இடம், செய்த நன்மை தீமைகள் மற்றும் அவற்றால் ஏற்பட்ட பாவங்களால் இந்த ஜென்மத்தில் உண்டாகும் திருமணத் தடை, தொழில் நஷ்டம், எதிரி, வழக்கு, வியாதி, கடன் பிரச்சனை போன்ற தீமைகள் விலகுவதற்குரிய வழிமுறைகளைக் கூறுவது.

இந்தப் பிறவியில் எந்தத் தெய்வத்தை அதிகமாக வழிபட வேண்டும், எந்தத் தெய்வத்தின் மந்திரத்தை எப்போது யாரிடமிருந்து பெற்றுச் செபிக்க வேண்டும் என்பதைக் கூறுவது. மந்திரத்தை உச்சரிப்பதால் கண்திருஷ்டி, எதிர்ப்பு, பொறாமை போன்ற தீமைகள் நீங்கி நன்மைகள் கிடைப்பதைப் பற்றியும் விளக்குவது.

வாழ்வில் ஞான மார்க்கம் உள்ளதா, அது எப்போது யாரால் ஏற்படும் என்பதைப் பற்றிக் கூறுவது.
மிகவும் துல்லியமான ஜோதிட ஆலோசனை. எனது தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டுதல் கிடைத்தது.
திருமண பொருத்தம் மிகவும் சரியாக இருந்தது. மிகவும் நம்பகமான நாடி ஜோதிட நிலையம்.
மிகவும் பொறுமையாக அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார். நன்றி.
எப்படி ஆலோசனை பெற விரும்புகிறீர்கள், எந்த மொழியில் வசன வரிகள் வேண்டும் என்பதைத் தெரிவிக்கவும்.
உங்கள் ஜோதிட ஆலோசனைக்காக எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
கோயம்புத்தூரில் உள்ள எங்கள் நிலையத்திற்கு நேரில் வருகை தந்தோ அல்லது ஆன்லைன் வழியாகவோ ஜோதிட ஆலோசனை பெறலாம்.
வரைபடத்தில் பார்க்க↗